10:50 AM

அஜித்தின் வெளிப்டையான பேச்சும் எனது சுயநலமான எண்ணங்களும்?..


இவ்வளவு தைரியமாக தன்னோட கருத்தை அஜித்தால் மட்டுமே சொல்லமுடியும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் அவர் பெயர் "தல"யோ?. கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் தலையின் பேச்சுக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆம் எனக்கும் தல போல வருமா என்று நினைக்க வைத்தது. ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகு அவரது பேச்சில் சிறது சுயநலம் இருந்தாக எனக்கு தோன்றியது. ஆம் எனக்கு அதில் சிறிது உடன்பாடு இல்லை.

முக்கியமாக காவேரி பிரச்சினை சம்பந்தமாக அவர் சொன்ன விஷயம். "காவேரி பிரச்சனை சம்பந்தமாக நடக்கும் நிகழ்ச்சியில் எங்கள ஏன் கலந்து கொள்ள கட்டாய படுத்துகிறார்கள் அதற்கு தான் அரசாங்கம் இருக்குகிறதே " என்று கேட்கிறார். ஆம் காவேரி பிரச்சனையை நடிகர்களால் தீர்க்க முடியாதுதான். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதில் கலந்து கொண்டால் தவறு ஒன்றும் இல்லையே. காவேரி பிரச்சனையால் பாதிக்கப்படுவது விவசாயியும் பொதுமக்களும்தான். உங்கள் படத்தை பார்க்க இருபது ரூபாய் டிக்கெட் என்பது ரூபாயாக இருந்தாலும் வாங்கி பார்க்கிறார்கள் உன் ரசிகர்களும் பொதுமக்களும்தான் அதில் பல பேரு காவேரி பிரிச்சனையால் பாதிக்க பட்டவர்கள்தானே. அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கள் ஏன் குரல் கொடுக்க கூடாது?. அல்லது அவர்களுக்காக நடத்தபடும் போராட்டதில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள கூடாது?. அவ்வாறு நீங்கள் அவர்களுக்காக செய்தால் "என்னோட தல எனக்காக போராட்டதில் கலந்துகொண்டாரே" என்று சந்தோஷ படுகிறானே அதற்காக கூட ஒரு நாள் நீங்கள் (தல) கலந்து கொள்ள கூடாதா?.

"மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று இன்னொரு விஷயம் சொல்கிறார். மக்கள் பிரச்சனையை அரசியல்வாதிகள் தான் கேட்கவேண்டுமா என்ன?. யார் வேண்டுமானாலும் கேட்கலாமே. அப்பறம் ஏன் தல உங்க பாடல்களில் சமுக விழிப்புணர்வு வரிகள் வருகிறது. சினிமா வேறு தமிழ் சமுகம் வேறு இல்லை தல. இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் மற்றும் ஆட்சி செய்பவர்கள் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள்தானே.

நீங்க அரசியலையும் சமுக சேவையும் போட்டு குழம்ப வேண்டாம். நிச்சயமாக உங்களிடம் இருக்கும் ரசிகர்கள் அன்பால் இணைந்த வத்திகுச்சிகள் அவற்றை முடிந்த வரை சமுக சேவைகளுக்கும் மற்றும் சமுக மாற்றங்களுக்கும் மற்றும் சமுக பிரச்சனைகளுக்கும்(ஈழம், காவிரி) வெளிச்சம் கொண்டு வர பற்ற வையுங்கள்.

7 comments:

sathishsangkavi.blogspot.com said...

சரியாகச்சொன்னீங்க....

Anony said...

Aduthu oru Kelvi ketare..athai vituteenga..ellathukum naanga venum..aanal Arasiyaluku vanthal mattum vida matengareenanu? :)

ரோஜா காதலன் said...

அஜித் பேசி இருப்பது மிரட்டல் விடுப்பது குறித்தது. இந்த சமுகத்தை சேர்ந்த எந்த மனிதனும், நியாயத்திற்காக போரடுவதும், அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததே. நம்மால் இயன்ற அளவு அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடமால், நம் சுதந்திரத்தை காத்து நடப்பதே நல்லது.

kanavugalkalam said...

காவேரி பிரச்சனையில் மக்கள் நடத்தும் போராட்டத்தில் அவரை கலந்து கொள்ள சொல்லுகள் அது சரி. அதை விட்டு அரசியல்வாதிகள் நடத்தும் போலி போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளமறுக்கிறார் அவர் சொன்ன வார்த்தையில் என்ன தவறு.

கிள்ளிவளவன் said...

//சரியாகச்சொன்னீங்க....//

நன்றி Sangkavi

கிள்ளிவளவன் said...

//Aduthu oru Kelvi ketare..athai vituteenga..ellathukum naanga venum..aanal Arasiyaluku vanthal mattum vida matengareenanu? :)//


நான் இங்கு அரிசயல்வாதிகளை பற்றி கூறவில்லை. நான் சாதாரண பொதுமக்களி பற்றித்தான் எழுதிருகிறேன்.

கிள்ளிவளவன் said...

//அஜித் பேசி இருப்பது மிரட்டல் விடுப்பது குறித்தது. இந்த சமுகத்தை சேர்ந்த எந்த மனிதனும், நியாயத்திற்காக போரடுவதும், அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததே. நம்மால் இயன்ற அளவு அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடமால், நம் சுதந்திரத்தை காத்து நடப்பதே நல்லது//.

வேற எந்த போராட்டதிற்கு கலந்து கொள்ளவேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்று எனக்கு சொல்லுங்களேன்.



///காவேரி பிரச்சனையில் மக்கள் நடத்தும் போராட்டத்தில் அவரை கலந்து கொள்ள சொல்லுகள் அது சரி. அதை விட்டு அரசியல்வாதிகள் நடத்தும் போலி போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளமறுக்கிறார் அவர் சொன்ன வார்த்தையில் என்ன தவறு///

நானும் இதைதான் சொல்லிருக்கிறேன்.