9:29 AM

ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் மெஹா ஹிட்.




ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் மெஹா ஹிட்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் தமிழில் பொங்கலன்று வெளியானது. சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் படம் ஹிட்டாகி உள்ளது. மேலும் இந்த படம் தெலுங்கில் "யுகனிக்கி ஒக்கடு" என்று டப் செய்ய பட்டு கடந்த பெப்ரவரி 5 ஆம் தேதி வெளியானது. வெளியான மூன்றே நாளில் கிட்டத்தட்ட இரண்டு கோடி அளவில் வசூலித்து மெஹா ஹிட்டாகி உள்ளது.




இதற்கு முக்கிய காரணங்கள் :


# 3.03 மணிநேர படம் 2.21 மணிநேர படமாக குறைக்க பட்டது.
# செல்வராகவனின் முந்தைய வெற்றி படங்கள்.
# சோழர்களின் வரலாறு ஓரளவு அவர்களுக்கு (அங்கே சோடர்களாக ஆட்சி செய்தனர்).


ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அதேபோல் ஆயிரம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒன்னும் செய்யவில்லை என்றே சொல்லலாம்.

உங்கள் பார்வைக்கு:




10:50 AM

அஜித்தின் வெளிப்டையான பேச்சும் எனது சுயநலமான எண்ணங்களும்?..


இவ்வளவு தைரியமாக தன்னோட கருத்தை அஜித்தால் மட்டுமே சொல்லமுடியும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் அவர் பெயர் "தல"யோ?. கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் தலையின் பேச்சுக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆம் எனக்கும் தல போல வருமா என்று நினைக்க வைத்தது. ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகு அவரது பேச்சில் சிறது சுயநலம் இருந்தாக எனக்கு தோன்றியது. ஆம் எனக்கு அதில் சிறிது உடன்பாடு இல்லை.

முக்கியமாக காவேரி பிரச்சினை சம்பந்தமாக அவர் சொன்ன விஷயம். "காவேரி பிரச்சனை சம்பந்தமாக நடக்கும் நிகழ்ச்சியில் எங்கள ஏன் கலந்து கொள்ள கட்டாய படுத்துகிறார்கள் அதற்கு தான் அரசாங்கம் இருக்குகிறதே " என்று கேட்கிறார். ஆம் காவேரி பிரச்சனையை நடிகர்களால் தீர்க்க முடியாதுதான். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதில் கலந்து கொண்டால் தவறு ஒன்றும் இல்லையே. காவேரி பிரச்சனையால் பாதிக்கப்படுவது விவசாயியும் பொதுமக்களும்தான். உங்கள் படத்தை பார்க்க இருபது ரூபாய் டிக்கெட் என்பது ரூபாயாக இருந்தாலும் வாங்கி பார்க்கிறார்கள் உன் ரசிகர்களும் பொதுமக்களும்தான் அதில் பல பேரு காவேரி பிரிச்சனையால் பாதிக்க பட்டவர்கள்தானே. அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கள் ஏன் குரல் கொடுக்க கூடாது?. அல்லது அவர்களுக்காக நடத்தபடும் போராட்டதில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள கூடாது?. அவ்வாறு நீங்கள் அவர்களுக்காக செய்தால் "என்னோட தல எனக்காக போராட்டதில் கலந்துகொண்டாரே" என்று சந்தோஷ படுகிறானே அதற்காக கூட ஒரு நாள் நீங்கள் (தல) கலந்து கொள்ள கூடாதா?.

"மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று இன்னொரு விஷயம் சொல்கிறார். மக்கள் பிரச்சனையை அரசியல்வாதிகள் தான் கேட்கவேண்டுமா என்ன?. யார் வேண்டுமானாலும் கேட்கலாமே. அப்பறம் ஏன் தல உங்க பாடல்களில் சமுக விழிப்புணர்வு வரிகள் வருகிறது. சினிமா வேறு தமிழ் சமுகம் வேறு இல்லை தல. இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் மற்றும் ஆட்சி செய்பவர்கள் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள்தானே.

நீங்க அரசியலையும் சமுக சேவையும் போட்டு குழம்ப வேண்டாம். நிச்சயமாக உங்களிடம் இருக்கும் ரசிகர்கள் அன்பால் இணைந்த வத்திகுச்சிகள் அவற்றை முடிந்த வரை சமுக சேவைகளுக்கும் மற்றும் சமுக மாற்றங்களுக்கும் மற்றும் சமுக பிரச்சனைகளுக்கும்(ஈழம், காவிரி) வெளிச்சம் கொண்டு வர பற்ற வையுங்கள்.