4:02 PM

தமிழ் திரைப்பட பின்னனனி இசையில்(BGM) ஒரு வெற்றிடம்!!!!!!



கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து இன்றும் இசையில் ராஜாவாக இருக்கும் இளையராஜாவிற்கு பிறகு இன்றைய தமிழ் திரைப்பட பின்னனனி இசையில்(BGM) ஒரு வெற்றிடம் இருப்பது வேதனை படவேண்டிய விஷயம்.



ஏன் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இல்லையா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுதான் நினைக்கிறன். அவர் திரைப்பட பாடல்களில் தந்த புதுமை பின்னணி இசையில் தரவில்லை அல்லது தரமுயலவில்லை என்பது நிதர்சன உண்மை. இன்றைய தமிழ் திரைப்பட இசையமைபாளார்கள் பெரும்பாலும் அந்த படங்களில் வரும் பாடல்களையே பின்னனிசையாக பயன்படுத்திகொண்டிருகிறார்கள்.



ஆனால் இளையராஜா அவர்களின் பின்னணி இசை பெரும்பாலும் அந்த படத்தின் பாடல்களில் இருந்து வேறுபடும். உதாரனமாக "மௌனராகத்தில்" வரும் பின்னணி இசை, இந்த இசைக்கு உருகாதார் யாரும் இல்லை.

மேலும் சில உதாரணங்கள் :
இதயம்,
நெஞ்சத்தை கிள்ளாதே,
தளபதி,
சிகப்பு ரோஜாக்கள்,
வருஷம் 16 ,
தேவர்மகன்.


இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் இந்த பின்னணி இசைகளை கேட்கும்போது நமக்குள்ளே இனம் புரியாத அழகான மாற்றங்கள் தோன்றும். ஆனால் இதை இத்தலைமுறை இசை அமைப்பாளர்கள் செய்ய தவறவிட்டனர்.


அதனால் நிச்சயம் ஒரு வெற்றிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.


அவரின் பல இசை படைப்புகள் நமக்கு(தென் இந்தியர்கள்) மட்டுமே தெரிந்தது நமது பாக்கியமா அல்லது அவரது துரதிஷ்டவசமா என்பது காலத்தின் கேள்வி.

12:00 PM

படக்காட்சி - பெட்ரோல் பங்கில் மொபைலை உபயோகம் செய்ததால் ஏற்பட்ட மரணம்.




இந்த தீவிபத்து பிரேசில் நாட்டில் உள்ள ஒரு ஷெல் பெட்ரோல் பங்கில் நடந்தது.
இங்கு வேலை செய்யும்ஒரு தொழிலாளி பெட்ரோல் வண்டியில் பெட்ரோலை சரி பார்க்கும் போது வெளிச்சம் இல்லாததால் தன்னோடய மொபைல் போனை உபயோகப்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார்
.
நண்பர்களே தயவுசெய்து பெட்ரோல் பங்கில் மொபைல் போன்களை உபயோகம் படுத்த வேண்டாம்.