1:49 AM

மோதி விளையாடு - திரையரங்க அனுபவம்


அந்த கொடுமைய எங்க போய் சொல்வென். அதான் இப்பதிவில் நான் படம் பார்க்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை கற்பனை கலந்து ஒரு வடிவேல் ஸ்டைலுல எழுதியருக்கிறேன்
ஸ்டார்ட் மியூசிக்.

நான் சிவனென்னு ரொட்ல போய்டிருந்தென், போற வழியில ஒரு சினிமா தியேட்டர், பார்த்தா சரண் இயக்கும் "மோதி விளையாடு" பெரிய டிஜிட்டல் பெனர் இருந்திச்சு. பேரே பயங்கரமா இருக்கு வேணாம்டா சாமி அப்புறம் பார்க்கலாம் முடிவு பண்ணி திரும்பினா அப்ப ஒரு குரல் ""சார் டிக்கெட் இருபது ரூபாய்தான், பார்த்துட்டு போங்க சார்" ஒருத்தன் சொனனான்.
"என்னப்பா சொல்ற இருபது ருபாயா ?" என்று கெட்டதுக்கு சொன்னான் பாருங்க ஒரு பதில் "அதுகெல்லாம் ஒரு மூஞ்சி வேனும் சார், உங்களுக்கு ஃபிரியாவே கொடுக்கலாம் ஆனா புதுப்படம் பாருங்க அதான் இருபது ருபாய்" . "டெய், நீ ஒவரா பேசர , முதல டிக்கெட்ட கொடு" வாங்கி மைல்டா ஒரு டவுட்டொட உளள போனா என்ன சேர்த்து மொத்தம் இருபது பேருதான்.

சரி புது படம்தானே மனச தெத்திகிட்டு பார்க்க ஆரம்பிச்சென். ஒப்பனிங்கலாம் நல்லாதான் இருந்திச்சு , அப்புறம் ஒருத்தன் பேச ஆரம்பிச்சான் பாருங்க, அவன் பேசரது தமிழா? டமிலா? முடியல....... பக்கத்துல இருக்கருவனுட்ட கேட்டென் "சார், இவர் எப்ப சார் பேச்ச நிறுத்துவாறு ". "யொவ், இவருதான் ஹீரோ , படம் ஃபுல்லா இவருதான் பேசுவாரு" அப்படினு சொன்னான் பாருங்க அப்படியே ஸாக்காயிட்டென்.

நேரகொடுமைடா சாமினு படத்த பார்க்க ஆரம்பிச்சா அப்பானு ஒருத்தன் படத்துல வந்தான் பேசரப்பெல்லாம் புல்ஷீட் புல்ஷீட் திட்டினான் அது என்னவோ என்ன திட்டர மாதிரியே இருந்திச்சு.

கொஞ்சநேரத்தில பக்கதிலுருந்து குறட்டை சத்தம் கேட்க ஆரம்பிக்க, படத்துல வர பாட்டும் அதுவும் ஒரே மாதிரி இருந்திச்சு. எனக்கும் லெசா கொட்டாவி வந்து, கண்ண சொக்கிடச்சு.
டக்னு லைட்ட பொட்டாங்க, இடைவேளைனு சொன்னாங்க. அடப்பாவிகளா நிம்மதியா தூங்ககூட விட மாட்டானுங்க போலருக்கு. சரினு வெளியே வந்தா எண்ணி பத்து பேரு. அப்ப மத்தவங்கெல்லாம் எஸ்கேப்பா.

சரி கழுதை வந்தது வந்தாச்சு கடைசி வரை பார்த்திட்டு பொவொம். மறுபடியும் உள்ளே பொனென்.

பாருங்க படத்துல ஒரு ட்விஸ்டு ஹீரோ அனாதையாம். அப்பாடானு நிமிர்ந்து வக்காந்தா, ட்விஸ்டு மேல ட்விஸ்டுனு போட்டு என்ன குமுற குமுற சாகடிச்சானுங்க. அப்படியே தியேட்டர் இருக்கரவன் ஒருத்தன் ஒருத்தனா கிளம்ப அரம்பிசானுங்க. ஆன நான் கடைசி வர பார்க்கனும் வைராக்கியமா இருந்தென்.

கிளைமாக்ஸ்க்கு முன்னாடி ஒரு பாட்டு வந்தது, சரி குத்தாட்டம்தான் ஆடபோறாங்கனு குஜாலா இருந்தா அங்க ஒரு ட்விஸ்டு , ஆடினது வெற யாரும் இல்லை படத்தோட மியுசிக் டைரக்டர்ஸ், அய்யோ கண்ண கட்டுதே.,,,,,,,,,,,,,,,,.அய்யனாரப்பா

கடைசில தியேட்டர்ல ஆறு பேரு. அதுல இரண்டு பேரு கிளைமாக்ஸ்ல ஹீரோ பெச ஆரம்பிக்க போது கிளம்ப ஆரம்பிச்சிடாங்க . ஆனா போகும்போது எங்களை பார்த்து ஒரு வார்த்தை சொன்னாங்க "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்கடா ரொம்ப நல்லவங்கடா ..........." .

படம் முடிந்து வெளியே வரும்போது எனக்கு டிக்கெட் கொடுத்தவன தேடினேன் கிடைக்கல "நீ எந்த ஜில்லாவுக்கு போனாலும் உன் சாவு என் கைலதாண்டியொவ்" சொல்லிபுட்டு கிளம்பினேன்.

பின்குறிப்பு
நிச்சயமாக இயக்குனர் சரண் தமிழ் திரையுலகிற்கு பல வெற்றி படங்களை கொடுத்த நல்ல இயக்குனர். ஆனால் இந்த படத்தின் ஏமாற்றமே இந்த வெளிப்பாடு.

7:15 PM

விலங்குகளிடம் கில்மா பண்ணும் அபூர்வ மனிதர்.

வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா லவ்ரா இருக்கலாம் இல்ல பிரண்ட்சா இருக்கலாம்?.


இப்படி ஒரு சூப்பர் பிகர் கேட்டால் , என்ன சொல்வோம் " தாரளாமா, ஹீ ஹீ " என்று பல்லை இளீத்து கொண்டு பதில் சொல்வொம் அல்லது மைண்டல வச்சிருக்கென் “என்று வரட்டு பம்மாத்து (என்னை போல ) விடுவொம். ஆனால் ஒரு சிங்கமொ அல்லது புலியொ "வாங்க பழகலாம்" என்று கேட்டால் உங்கள் பதில் ?????????

ஆனால்o தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் ரிச்சர்சன் என்பவர் சிங்கம் , புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளோடு பழகி அது கூடவெ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.. ஆச்சிரியமாக இருக்குல ஆனால் உண்மை , அவரோட நெருங்கிய தோழர் யார் தெரியுமா? நம்ம சிங்கம்தான்.

இவர் ஜோகன்ஸ்பர்க் அருகே அமைந்திருக்கும் வனவிலங்கு காப்பகத்தில் பணி புரிகிறார்
இவர் விலங்குகளின் உள்ளுணர்வை தெரிந்து கொள்வதில் திறமையுள்ளவர். இதனால் இவர் எந்த கொடிய விலங்குகளிடம் கூட பழக முடியும். இதுவரை எந்த மிருகமும் கொபமாக முறைத்தது கூட இல்லை. இது ஒரு கடவுள் கொடுத்த வரம் என்று சொல்கிறார்
.


இங்கே இவர் சில விலங்குகளோடு கொஞ்சும் புகைப்படங்களை பாருங்கள்

நல்லாதான் சிங்கத்த முத்தம் கொடுக்கிறார், அது அவருக்கு . ஆனா நமக்கு கொத்தோட புடிங்கிடுமோ என்று பயமால இருக்கு.

“நமக்கும் பார்க்க ஆசையா தான் இருக்கு , ஸோ ஸ்வீட்!...



" நல்லா தான் போஸ் கொடுக்கிறார், என்னமொ நமீதாகிட்ட ெராமான்ஸ் பண்ற மாதிரி”



“ இதுவல்லவொ போஸ் “ .


இவருக்கு என்னதான் மிருகத்தொட உள்ளுணர்வு தெரிந்து பழகினாலும் , நம்ம ஊர் பெண்களோட மனசல என்ன இருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது.

மீண்டும் சந்திப்போம்.