3:33 PM

மாப்பு வச்சிடாடா ஆப்பூ?

நட்ட நடு இராத்திரியில் மகேஷ் தூங்காமல் எதெயோ வெறித்து கொண்டு பார்த்துகொண்டிருந்தான். " நீ இன்னும் தூங்கலையா நானும் உன்ன ரெண்டு நாளபார்க்கிறேன் சரியா சாப்பிட மாட்ற பேச மாட்ற தூங்க மாட்ற என்னாச்சு உனக்கு " என்று ரகு கேட்டான். ரகுவும் மகேஷும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் ஒன்றாக வேலைசெய்கிறார்கள்.

"என்னடா தெரியாத மாதிரி கேட்கிற உனக்கே தெரியும் கீதா என்னை லவ் பண்ணமுடியாதனு சொல்லிட்டா , அவதான வாழ்க்கைனு நினைச்சிடிருந்தேன் " என்று மகேஷ் கரகரத்த குரலில் சொன்னான்.

" சரி விடு இப்ப என்ன ஆயிபோச்சி, கீதா இல்லாட்டி வேற பொண்ணு , மச்சான் உன்ன மாதிரி ஆளுங்கதான் பொண்ணுங்களுக்கு வெய்ட்டு ஏத்தி விற்றவேண்டியது அப்புறம் அவளுங்க ரவுச தாங்கமுடியாதுடா சாமி " ரகு நக்கலாக சொன்னான்.

" நானே கடுப்புள்ள இருக்கேன் இதுல நீ வேற " என்று கோபமாக சொனனான் மகேஷ் " மச்சான் உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும்தாண்டா , நீ கவலைப்படாத நான் இருக்கேன்டா! அந்த பொண்ணுகிட்ட நான் பேசறேன் " என்று ரகு ஆறுதல் சொன்னான்.

அதற்கு மகேஷ் " எப்படி மச்சான் ஆனா சொதப்பக்குடாது மச்சான், எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறன் " .

" அட போடா நம்பிக்கைதான் வாழ்க்கை நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கதானபோற. அப்புறம் நான் கேட்காமலேயே நீ "புல்" வாங்கி தருவ பாரேன் , சரி இப்ப போய் தூங்கு " என்று நம்பிக்கையோடு சொன்னான் ரகு.

பிறகு இருவரும் உறங்க சென்றார்கள். மறுநாள் இருவரும் கீதாவின் வருகைக்காக காத்திருந்தனர்.

மகேஷ் மிகவும்பதட்டமாக இருந்தான். "நான் லவ்வ சொன்னப்ப கூட இப்படி பயப்படல இப்ப ஏன் இப்படி மனசு படபடக்குது " என்று தானாக பேசிக்கொண்டான் மகேஷ். ரகுவை நோட்டமிட்டான் அவன் இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்டா என்பதை போலஅலட்சியமாக பார்த்தான்.

கீதா வந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் மகேஷ் ரொம்பவே பதட்டமானான் . " மச்சான் அவ வரா நான் இங்க கடை குள்ள இருக்கான் நீ போய் பேசு" என்று மகேஷ் சொன்னான். ரகுவும் தலையாட்டிவிட்டு கீதாவை நெருங்கினான்.

அவள் பார்த்தவுடன் சிரித்துவிட்டு " நல்லா இருக்கீங்களா , உங்களபார்க்கணும்னு நினைச்சேன் ஆனா நீங்களே நேரா வந்திடீங்க " என்று ரகு அசடுகலந்த சிரிப்புடன் சொன்னான். " அப்படியா என்ன விஷயம் சொல்லுங்க" அவன்என்ன சொல்ல போறான் என்று தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி பதில்சொன்னாள். இவர்கள் இருவரும் பேசிகொல்வதை தூரத்திலிருந்து பார்த்துகொண்டிருந்தான் மகேஷ்.

"நேரா விஷயத்திற்கு வந்திடேறேன் , உன் மேல மகேஷ் உயிரே வச்சிருக்கான், ஆனா நீ அவன காதிலிக்க முடியாதன்னு சொல்லிட்ட" என்று ரகுசொல்லிமுடிப்பதுகுள் " ஆம்மா இப்ப அதுக்கு என்ன ?.. இப்ப நீங்க என்ன சொல்ல வறிங்க" என்று கீதா கோபமாக சொன்னாள். ரகு சிறிது நேரம் யோசித்தான் . பிறகு "சரி உனக்கு அண்ணன் இருக்கானா ?" என்று கேட்டான் அதற்கு கீதாவிடம் இல்லை என்று சட்டென்று ஒரு பதில். " இந்தபாரு இனிமே உனக்கு அண்ணன் நான்தான் , எந்த அண்ணனும் தன்னோட தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கைதான் அமைச்சி கொடுப்பான் , அதனால" என்றுமறுபடியும் சொல்லிமுடிப்பதுகுள் கீதா சுற்றிமுற்றி பார்த்துவிட்டு "மகேஷ் இங்கதான் இருக்கானு நினைக்கிறன் அவன கொஞ்சம் வரசொல்லுரிங்களாஅவன்ட கொஞ்சம் பேசணும் " என்று நிதானமாக சொன்னாள். ரகு முகத்தில் நூறுவாட்ஸ் பிரகாசம் வந்தது. சிறிது தூரத்தில் உள்ள கடைக்குள் இருக்கும் மகேஷை செல்பேசி முலம் " மச்சான் சீக்கரம் வாடா , உன்ன அவ வரசொல்ரா " என்றுசொன்னான். மகேஷும் அவர்களை பார்க்க சந்தோசமாக வந்தான்.

நெருங்கியவுடன் கீதாவை பார்த்தான் அவளும் சிரித்தாள். " ஹாய், சொல்லு கீதா என்ட பேசனும்னு சொன்னியா " என்று ஆவலாக கேட்டான். ரகுவும் விலக ஆரம்பித்தான் . " ரகு நீங்களும் இருங்க. சும்மா சொல்லக்கூடாதுரகு நல்லாவே என்னோட புத்தில உரைக்கிற மாதிரி பேசினாரு மகேஷ் " என்றுகீதா நக்கலாக சொன்னாள். மகேஷ் பதட்டம் கலந்த ஆர்வத்துடன் என்ன சொல்லபோகிறாள் என்று கேட்க ஆரம்பித்தான்.

" எனக்கு இனிமே ரகுதான் அண்ணன்னு அவரே சொன்னாரு ,கேட்கவே ரொம்பசந்தோசமா இருக்கு. எனக்கு ஒன்னுனா அவரு இனிமே பார்த்துபார்னு நம்பிக்கைஇருக்கு. ஆனா" என்று கீதா இழுக்க ஆரம்பித்தாள். ரகுவும் மகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். கீதா மகேஷை பார்த்து " நான் என்ன சொல்லவறேனா எனக்கு இனிமே ஒருஅண்ணன் இல்ல இரண்டு அண்ணன் உன்னையும் சேர்த்து , நான் வரேன் " என்று முடித்துக்கொண்டு அவிடத்தை விட்டு நகர்ந்தாள் கீதா. மகேஷின் முகத்தில் சலனம் இல்லை. அடப்பாவி நான்தான் வேண்டான்னு சொன்னேனே பேசறன்னு சொல்லி என்ன அண்ணன் ஆக்கிட்டியே என்று ரகுவை திரும்பி பார்த்தபொழுது ரகு 100 மைல் வேகத்தில் தூரத்தில் ஓடிகொண்டிருந்தான்.

நண்பர்களே உங்களுக்கு இந்த கதை பற்றி தங்களின் கருத்தை பின்னோடோம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். மறக்காம வோட்டையும் குத்துங்க எஜமான் குத்துங்க இந்த பொண்ணுங்களே இப்படிதான்.

9:36 PM

கண்களை பாதுகாக்க ஒரு சிறந்த பயிற்சி.






இன்றைய காலக்கட்டத்தில் கணினியின் அவசியம் மிகவும் இன்றியமையாதது. இன்று எல்லா துறைகளிலும் கணினி புகுந்து விட்டது. அதனால் இன்று வேலை செய்பவர்கள் காலையில் முதல் மாலை வரை கணினி முன் உட்கார்வது தவிர்க்க முடியாதது. அதனால் உடம்பில் மற்ற உறுப்புகளை விட நமது கண்கள் தான் அதிகமாக வேலை செய்கிறது. ஆனால் நாம் நமது கண்களை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் நாம் தெரிந்தே கண்களை கெடுத்து கொள்கிறோம்.

ஆனால் நமது வேலை செய்யும் நேரத்தில் சிறிது நேரத்தை பயன்படுத்தி சின்ன சின்ன கண்பயிர்ச்சிகள் செய்வதன் மூலம் நாம் கண்களை நன்றாக பாதுகாக்க முடியும். இந்தபயிர்சிக்கு பெயர் "20 - 20 - 20".

1. முதலில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை உங்கள் கவனத்தை கணினியிலேருந்து திசை திருப்பி 20 அடி தொலைவிலுள்ள பொருளை உற்று பார்கவேண்டும். இதனால் அசதியான உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெரும்.

2. அதேபோல் 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டவேண்டும். இதனால் உங்கள் கண்களின் ஈரபசப்பு தன்மை குறையாமல் இருக்கும். மேலும் கணினியால் ஏற்படும் கண்ணெரிச்சல் குறையும்.

3. அதெபோல் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரே இடத்தில் உட்காராமல் எழுந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். இதனால் உங்கள் உடம்பிற்கு சீரான இரத்த ஓட்டம் ஏற்படும்.


இவ்வாறு நீங்கள் "20 - 20 - 20" பயிற்சியை நடைமுறை படுத்தினால் நிச்சயமாக் கண்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வகை பயிற்சி எளிதாக இருந்தாலும் பழகத்திற்கு கொண்டு வருவது சிரமம்தான் ஆனால் முயற்சி செய்தால் நன்மை நமக்குதான்.

பின்குறிப்பு:
இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் சம்பந்தம் இருக்கு , இந்தப்படம் உங்கள் கண்களுக்கு இரண்டு இரண்டாக தெரிந்தால் உங்க கண்ணு நல்ல கண்ணு. ஆனால் ஒழுங்காக தெரிந்தால் நல்ல கண்மருத்துவரை பாருங்கள்.