4:42 PM

நமீதாவும் இரண்டு முனிவர்களும்






இரண்டு முனிவர்கள் ஒரு காட்டு பகுதியில் சென்று கொண்டுயிருந்தனர். அப்பொழுது மழை கொட்ட ஆரம்பித்தது . அதை பொருட்படுத்தாமல் நடக்க தொடங்கினர் . பாருங்கள்!!!! அவர்கள் முன்பாக கடவுள் தொன்றுவாரோ இல்லையோ கவர்ச்சி பீரங்கி நமீதா அவர்கள் முன் தென்பட்டார். ஆனால் மழை வெள்ளத்தினால் நமீதா சிக்கி கொண்டு போராடிகொண்டிருந்தார். அப்பொழுது இருவரில் ஒரு முனிவர் மழையில் நனைந்த நமிதாவை லாவகமாக தூக்கினார் . இதை பார்த்த இன்னொரு முனிவர் இது என்ன கொடுமை என்று தலையில் அடித்து கொண்டார். மேலும் மேடான பகுதி வந்தவுடன் நமீதாவை இறக்கி விட்டார் முனிவர்.

பிறகு இரண்டு முனிவர்களும் அவர்களின் இருப்பிடம் நடக்க ஆரம்பித்தனர். இருப்பிடம் வந்தவுடன் இன்னொரு முனிவர் நமீதாவை தூக்கிய முனிவரிடம் "நாம் முனிவர்கள், முற்றும் துறந்தவர்கள், நீ செய்த காரியம் ஒரு முனிவர் செய்யகூடாதது அதுவும் நமீதாவை தூக்கியது மிக பெரிய குற்றம் " என்று கோபமாக சொன்னார். அதற்கு அந்த முனிவர் "நான் நமீதாவை அப்பொழுதே இறக்கி விட்டுவிட்டேன்!. நீங்கள்தான் இன்னும் அப்பெண்ணை மறக்காமல் மனதிலே வைத்துக்கொண்டு இருக்கிறிர்கள்."என்று சாந்தமாக சொன்னார்.

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

நமீதாவையே தூக்கிட்டாரா ? அவர் உண்மையிலேயே முனிவர் தானா ??

யூர்கன் க்ருகியர் said...

நமீதாவை தூக்கறது இருக்கட்டும்....முதல்ல இந்த "வோர்ட் வெரிபிகேசன்" ஐ தூக்குங்கப்பா!!!!

கடைக்குட்டி said...

நமி-ய தூக்குறதா ?? :-)

சுந்தர் said...

நமிதாவை தூக்கிய கம்யூனிஸ்ட் பற்றி அறிய இங்கே வாருங்கள்.,
http://thenitamil.blogspot.com/2009/05/blog-post_06.html

கலையரசன் said...

இன்னும் எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க?
ஒரே கதையை உல்லாவாக்கி போட?
நெக்ஸ்ட் நயன்தாராவா?
எனிவே வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
நம்ம பக்கமும் வாங்க..

இரா.வெங்கட்ராமன். said...

இது பழைய கதையின் இப்போதைய வடிவம்தானே?
ஆனாலும் மிக அறுமை.!..