9:29 AM

ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் மெஹா ஹிட்.
ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் மெஹா ஹிட்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் தமிழில் பொங்கலன்று வெளியானது. சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் படம் ஹிட்டாகி உள்ளது. மேலும் இந்த படம் தெலுங்கில் "யுகனிக்கி ஒக்கடு" என்று டப் செய்ய பட்டு கடந்த பெப்ரவரி 5 ஆம் தேதி வெளியானது. வெளியான மூன்றே நாளில் கிட்டத்தட்ட இரண்டு கோடி அளவில் வசூலித்து மெஹா ஹிட்டாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணங்கள் :


# 3.03 மணிநேர படம் 2.21 மணிநேர படமாக குறைக்க பட்டது.
# செல்வராகவனின் முந்தைய வெற்றி படங்கள்.
# சோழர்களின் வரலாறு ஓரளவு அவர்களுக்கு (அங்கே சோடர்களாக ஆட்சி செய்தனர்).


ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அதேபோல் ஆயிரம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒன்னும் செய்யவில்லை என்றே சொல்லலாம்.

உங்கள் பார்வைக்கு:
10:50 AM

அஜித்தின் வெளிப்டையான பேச்சும் எனது சுயநலமான எண்ணங்களும்?..


இவ்வளவு தைரியமாக தன்னோட கருத்தை அஜித்தால் மட்டுமே சொல்லமுடியும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் அவர் பெயர் "தல"யோ?. கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் தலையின் பேச்சுக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆம் எனக்கும் தல போல வருமா என்று நினைக்க வைத்தது. ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகு அவரது பேச்சில் சிறது சுயநலம் இருந்தாக எனக்கு தோன்றியது. ஆம் எனக்கு அதில் சிறிது உடன்பாடு இல்லை.

முக்கியமாக காவேரி பிரச்சினை சம்பந்தமாக அவர் சொன்ன விஷயம். "காவேரி பிரச்சனை சம்பந்தமாக நடக்கும் நிகழ்ச்சியில் எங்கள ஏன் கலந்து கொள்ள கட்டாய படுத்துகிறார்கள் அதற்கு தான் அரசாங்கம் இருக்குகிறதே " என்று கேட்கிறார். ஆம் காவேரி பிரச்சனையை நடிகர்களால் தீர்க்க முடியாதுதான். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதில் கலந்து கொண்டால் தவறு ஒன்றும் இல்லையே. காவேரி பிரச்சனையால் பாதிக்கப்படுவது விவசாயியும் பொதுமக்களும்தான். உங்கள் படத்தை பார்க்க இருபது ரூபாய் டிக்கெட் என்பது ரூபாயாக இருந்தாலும் வாங்கி பார்க்கிறார்கள் உன் ரசிகர்களும் பொதுமக்களும்தான் அதில் பல பேரு காவேரி பிரிச்சனையால் பாதிக்க பட்டவர்கள்தானே. அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கள் ஏன் குரல் கொடுக்க கூடாது?. அல்லது அவர்களுக்காக நடத்தபடும் போராட்டதில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள கூடாது?. அவ்வாறு நீங்கள் அவர்களுக்காக செய்தால் "என்னோட தல எனக்காக போராட்டதில் கலந்துகொண்டாரே" என்று சந்தோஷ படுகிறானே அதற்காக கூட ஒரு நாள் நீங்கள் (தல) கலந்து கொள்ள கூடாதா?.

"மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று இன்னொரு விஷயம் சொல்கிறார். மக்கள் பிரச்சனையை அரசியல்வாதிகள் தான் கேட்கவேண்டுமா என்ன?. யார் வேண்டுமானாலும் கேட்கலாமே. அப்பறம் ஏன் தல உங்க பாடல்களில் சமுக விழிப்புணர்வு வரிகள் வருகிறது. சினிமா வேறு தமிழ் சமுகம் வேறு இல்லை தல. இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் மற்றும் ஆட்சி செய்பவர்கள் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள்தானே.

நீங்க அரசியலையும் சமுக சேவையும் போட்டு குழம்ப வேண்டாம். நிச்சயமாக உங்களிடம் இருக்கும் ரசிகர்கள் அன்பால் இணைந்த வத்திகுச்சிகள் அவற்றை முடிந்த வரை சமுக சேவைகளுக்கும் மற்றும் சமுக மாற்றங்களுக்கும் மற்றும் சமுக பிரச்சனைகளுக்கும்(ஈழம், காவிரி) வெளிச்சம் கொண்டு வர பற்ற வையுங்கள்.

4:02 PM

தமிழ் திரைப்பட பின்னனனி இசையில்(BGM) ஒரு வெற்றிடம்!!!!!!கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து இன்றும் இசையில் ராஜாவாக இருக்கும் இளையராஜாவிற்கு பிறகு இன்றைய தமிழ் திரைப்பட பின்னனனி இசையில்(BGM) ஒரு வெற்றிடம் இருப்பது வேதனை படவேண்டிய விஷயம்.ஏன் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இல்லையா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுதான் நினைக்கிறன். அவர் திரைப்பட பாடல்களில் தந்த புதுமை பின்னணி இசையில் தரவில்லை அல்லது தரமுயலவில்லை என்பது நிதர்சன உண்மை. இன்றைய தமிழ் திரைப்பட இசையமைபாளார்கள் பெரும்பாலும் அந்த படங்களில் வரும் பாடல்களையே பின்னனிசையாக பயன்படுத்திகொண்டிருகிறார்கள்.ஆனால் இளையராஜா அவர்களின் பின்னணி இசை பெரும்பாலும் அந்த படத்தின் பாடல்களில் இருந்து வேறுபடும். உதாரனமாக "மௌனராகத்தில்" வரும் பின்னணி இசை, இந்த இசைக்கு உருகாதார் யாரும் இல்லை.

மேலும் சில உதாரணங்கள் :
இதயம்,
நெஞ்சத்தை கிள்ளாதே,
தளபதி,
சிகப்பு ரோஜாக்கள்,
வருஷம் 16 ,
தேவர்மகன்.


இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் இந்த பின்னணி இசைகளை கேட்கும்போது நமக்குள்ளே இனம் புரியாத அழகான மாற்றங்கள் தோன்றும். ஆனால் இதை இத்தலைமுறை இசை அமைப்பாளர்கள் செய்ய தவறவிட்டனர்.


அதனால் நிச்சயம் ஒரு வெற்றிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.


அவரின் பல இசை படைப்புகள் நமக்கு(தென் இந்தியர்கள்) மட்டுமே தெரிந்தது நமது பாக்கியமா அல்லது அவரது துரதிஷ்டவசமா என்பது காலத்தின் கேள்வி.

12:00 PM

படக்காட்சி - பெட்ரோல் பங்கில் மொபைலை உபயோகம் செய்ததால் ஏற்பட்ட மரணம்.
இந்த தீவிபத்து பிரேசில் நாட்டில் உள்ள ஒரு ஷெல் பெட்ரோல் பங்கில் நடந்தது.
இங்கு வேலை செய்யும்ஒரு தொழிலாளி பெட்ரோல் வண்டியில் பெட்ரோலை சரி பார்க்கும் போது வெளிச்சம் இல்லாததால் தன்னோடய மொபைல் போனை உபயோகப்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார்
.
நண்பர்களே தயவுசெய்து பெட்ரோல் பங்கில் மொபைல் போன்களை உபயோகம் படுத்த வேண்டாம்.

11:44 AM

இர்பான் பதானை முத்தம் கொடுக்க முயன்ற பெண் - அழகான படக்காட்சி.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு விழாவில் சபீனா என்ற பெண் இர்பான் பதானை முத்தம் கொடுக்க முயல அந்த இடமே சிறிது நேரத்திற்கு பரப்பரபானது . பெங்காளி பெண்களுக்கு தைரியம் இருக்குனு தெரியும் ஆனா இந்த அளவுக்கு இருக்கும்னு தெரியாது.

5:36 PM

படக்காட்சி - சிறுவனை விழுங்கும் மிகப்பெரிய மலைப்பாம்பு .


1:49 AM

மோதி விளையாடு - திரையரங்க அனுபவம்


அந்த கொடுமைய எங்க போய் சொல்வென். அதான் இப்பதிவில் நான் படம் பார்க்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை கற்பனை கலந்து ஒரு வடிவேல் ஸ்டைலுல எழுதியருக்கிறேன்
ஸ்டார்ட் மியூசிக்.

நான் சிவனென்னு ரொட்ல போய்டிருந்தென், போற வழியில ஒரு சினிமா தியேட்டர், பார்த்தா சரண் இயக்கும் "மோதி விளையாடு" பெரிய டிஜிட்டல் பெனர் இருந்திச்சு. பேரே பயங்கரமா இருக்கு வேணாம்டா சாமி அப்புறம் பார்க்கலாம் முடிவு பண்ணி திரும்பினா அப்ப ஒரு குரல் ""சார் டிக்கெட் இருபது ரூபாய்தான், பார்த்துட்டு போங்க சார்" ஒருத்தன் சொனனான்.
"என்னப்பா சொல்ற இருபது ருபாயா ?" என்று கெட்டதுக்கு சொன்னான் பாருங்க ஒரு பதில் "அதுகெல்லாம் ஒரு மூஞ்சி வேனும் சார், உங்களுக்கு ஃபிரியாவே கொடுக்கலாம் ஆனா புதுப்படம் பாருங்க அதான் இருபது ருபாய்" . "டெய், நீ ஒவரா பேசர , முதல டிக்கெட்ட கொடு" வாங்கி மைல்டா ஒரு டவுட்டொட உளள போனா என்ன சேர்த்து மொத்தம் இருபது பேருதான்.

சரி புது படம்தானே மனச தெத்திகிட்டு பார்க்க ஆரம்பிச்சென். ஒப்பனிங்கலாம் நல்லாதான் இருந்திச்சு , அப்புறம் ஒருத்தன் பேச ஆரம்பிச்சான் பாருங்க, அவன் பேசரது தமிழா? டமிலா? முடியல....... பக்கத்துல இருக்கருவனுட்ட கேட்டென் "சார், இவர் எப்ப சார் பேச்ச நிறுத்துவாறு ". "யொவ், இவருதான் ஹீரோ , படம் ஃபுல்லா இவருதான் பேசுவாரு" அப்படினு சொன்னான் பாருங்க அப்படியே ஸாக்காயிட்டென்.

நேரகொடுமைடா சாமினு படத்த பார்க்க ஆரம்பிச்சா அப்பானு ஒருத்தன் படத்துல வந்தான் பேசரப்பெல்லாம் புல்ஷீட் புல்ஷீட் திட்டினான் அது என்னவோ என்ன திட்டர மாதிரியே இருந்திச்சு.

கொஞ்சநேரத்தில பக்கதிலுருந்து குறட்டை சத்தம் கேட்க ஆரம்பிக்க, படத்துல வர பாட்டும் அதுவும் ஒரே மாதிரி இருந்திச்சு. எனக்கும் லெசா கொட்டாவி வந்து, கண்ண சொக்கிடச்சு.
டக்னு லைட்ட பொட்டாங்க, இடைவேளைனு சொன்னாங்க. அடப்பாவிகளா நிம்மதியா தூங்ககூட விட மாட்டானுங்க போலருக்கு. சரினு வெளியே வந்தா எண்ணி பத்து பேரு. அப்ப மத்தவங்கெல்லாம் எஸ்கேப்பா.

சரி கழுதை வந்தது வந்தாச்சு கடைசி வரை பார்த்திட்டு பொவொம். மறுபடியும் உள்ளே பொனென்.

பாருங்க படத்துல ஒரு ட்விஸ்டு ஹீரோ அனாதையாம். அப்பாடானு நிமிர்ந்து வக்காந்தா, ட்விஸ்டு மேல ட்விஸ்டுனு போட்டு என்ன குமுற குமுற சாகடிச்சானுங்க. அப்படியே தியேட்டர் இருக்கரவன் ஒருத்தன் ஒருத்தனா கிளம்ப அரம்பிசானுங்க. ஆன நான் கடைசி வர பார்க்கனும் வைராக்கியமா இருந்தென்.

கிளைமாக்ஸ்க்கு முன்னாடி ஒரு பாட்டு வந்தது, சரி குத்தாட்டம்தான் ஆடபோறாங்கனு குஜாலா இருந்தா அங்க ஒரு ட்விஸ்டு , ஆடினது வெற யாரும் இல்லை படத்தோட மியுசிக் டைரக்டர்ஸ், அய்யோ கண்ண கட்டுதே.,,,,,,,,,,,,,,,,.அய்யனாரப்பா

கடைசில தியேட்டர்ல ஆறு பேரு. அதுல இரண்டு பேரு கிளைமாக்ஸ்ல ஹீரோ பெச ஆரம்பிக்க போது கிளம்ப ஆரம்பிச்சிடாங்க . ஆனா போகும்போது எங்களை பார்த்து ஒரு வார்த்தை சொன்னாங்க "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்கடா ரொம்ப நல்லவங்கடா ..........." .

படம் முடிந்து வெளியே வரும்போது எனக்கு டிக்கெட் கொடுத்தவன தேடினேன் கிடைக்கல "நீ எந்த ஜில்லாவுக்கு போனாலும் உன் சாவு என் கைலதாண்டியொவ்" சொல்லிபுட்டு கிளம்பினேன்.

பின்குறிப்பு
நிச்சயமாக இயக்குனர் சரண் தமிழ் திரையுலகிற்கு பல வெற்றி படங்களை கொடுத்த நல்ல இயக்குனர். ஆனால் இந்த படத்தின் ஏமாற்றமே இந்த வெளிப்பாடு.